No products in the cart.
பேருந்துகள் மோதி கோர விபத்து!
பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து இன்று 29 ஆம் திகதி காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.