இலங்கை

அனைத்து அரச மருத்துவமனைகளிலும் ஏற்பட உள்ள மாற்றம் !

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை பிரிவு, மாதாந்த சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், கதிரியல் பிரிவு, உள் நோயாளர் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு என அனைத்து பிரிவுகளும் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு தரப்படுத்தப்பட்ட ஆய்வக சேவையை வழங்கும் நோக்குடன் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆய்வகத்தின் திசு அறிவியல் பிரிவு, இலங்கை அங்கீகார வாரியத்தால் (SLAB) ஆய்வகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்திற்காக சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விண்ணப்பித்து அதற்கமைய அரச மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் தரப்படுத்தலுக்கு உட்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

சகல பொது சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றுவதே  அரசாங்கத்தின் குறிக்கோளாகும். மேலும்  கடமையில் உள்ள ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களின் தகவல்கள் உட்பட மனித வளங்களை நிர்வகிக்க தொழிநுட்பத்தை பயன்படுத்துவதில் முழு கவனமும் செலுத்தப்பட்டு அதை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகள்  முன்னெடுக்கப்பட உள்ளது. அத்தோடு டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சுகாதார பதிவுகளை ஒன்றிணைப்பதுடன், மருந்து விநியோக வலையமைப்பை எதிர்வரும் காலங்களில் தொழிநுட்பத்துடன் நெறிப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…