இலங்கை

இலங்கைக்கு ஏற்படவுள்ள பொருளாதார நெருக்கடி!

சர்வதேச நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு, சமீபத்திய வெளிநாட்டு அதிர்ச்சிகளும் செயற்பாடுகளும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளாவிய தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், சர்வதேச நாணய நிதியம் ஆதரிக்கும் திட்டத்தில் இலங்கை அதன் தாக்கத்தை எவ்வாறு குறைக்க முடியும் என்பதை மதிப்பிடுவதற்கு அதிக நேரம் தேவை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த தூதுக்குழுத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ உள்ளிட்ட குழுவினரின் சமீபத்திய இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட செய்தியில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து பாராட்டத்தக்க முடிவுகளைத் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெருக்கடி காலத்திற்கு பின்னர் 2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…