பக்தி

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்று!

முஸ்லிம் மக்கள் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று(10) ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமிய சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது.

புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, ஒருமாத காலமாக நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் ஒன்றே ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளாகும்.

காலையிலே நீராடி நறுமணம் பூசி புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்குச் செல்லும் முஸ்லிம் மக்கள் அங்கு விசேட தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுபடுவர்.

What's your reaction?

Related Posts

No Content Available