இலங்கை

ஏப்ரல் முதல் இலங்கையில் Starlink இணைய சேவை!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இலங்கையில் கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் சேவையை மேற்பார்வையிடுவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும் பயனர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் செயல்முறையை சீராக்க அரசாங்கம் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேவையைப் பெறுவது குறித்த ஆரம்ப விவாதங்களின் போது, ​​அரசாங்கம் தேசிய பாதுகாப்பு மற்றும் பயனர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் ஊடாக இணைய சேவையை வழங்கும் உலகின் முதல் நிறுவனமாக Starlink உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…