No products in the cart.
ஐ.பி.எல்: சண்றைசர்ஸுக்கெதிராக 200 ஓட்டங்களைப் பெற்ற கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்றைசர்ஸ் ஹைதரபாத்துக்கெதிரான போட்டியில் 200 ஓட்டங்களை நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸ் பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சண்றைசர்ஸின் அணித்தலைவர் பற் கமின்ஸ் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமெனத் தெரிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, வெங்கடேஷ் ஐயரின் 60 (29), அங்கிரிஷ் ரகுவன்ஷியின் 50 (32), அஜின்கியா ரஹானேயின் 38 (27), ரிங்கு சிங்கின் ஆட்டமிழக்காத 32 (17) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில் கமிந்து மென்டிஸ் 1-0-4-1, மொஹமட் ஷமி 4-0-29-1,ஸீஷன் அன்சாரி 3-0-25-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.