No products in the cart.
கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ஒரு நாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கான 24 மணி நேர ஒரு நாள் வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவை அந்த நாட்களில் இயங்காது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.