கனடா

கனடிய பல்கலைக்கழகம் இழைத்த தவறு!

கனடாவின் யார்க் பல்கலைக்கழகம், 2025 ஆம் ஆண்டு பட்டப்படிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தவறுதலாக மாணவர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

இவ்வாறு தவறுதலாக தகவல் வழங்கப்பட்ட மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

“அனுமதி பெற்ற மாணவர்களுக்கான வெபினார் அழைப்புக் கடிதம் தவறுதலாக பரந்த விண்ணப்பதாரர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதாக பல்கலைக்கழக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது அனுமதி கடிதம் அல்ல என்றாலும், அதைப் பெற்றவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தவறைத் தொடர்ந்து, ஒவ்வொரு பெறுநருக்கும் தெளிவுபடுத்தும் விளக்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலில் பிழை குறித்து விளக்கமும், குழப்பத்திற்கு நேரிடக்கூடிய பாதிப்பை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தவறான அழைப்புகள் மொத்த விண்ணப்பதாரர்களில் அரைவாசிப்பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம், முதல் மின்னஞ்சலை பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஏதேனும் சந்தேகங்களுக்காக தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. 

What's your reaction?

Related Posts

ஆல்பர்ட்டா மாகாணத்தில் வேகமாக அதிகரித்து வரும் வைரஸ் தொற்று!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மண்ணன், தட்டம்மை அல்லது மணல்வாரி (measles)…