இலங்கை

கனடிய மக்களை நெகிழ்ச்சியடையச் செய்த அமெரிக்கர்

 அமெரிக்க அரசு, கனடாவை கையாளும் முறையால் கவலையடைந்த ஒருவர், வாங்கூவர் நகரில் விளம்பரமொன்றை செய்து, கனடியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

வாங்கூவர் ஆர்ட் கேலரிக்கு அருகிலுள்ள மின்கிளர்ந்த விளம்பர பலகைகளில், கனடாவின் மேப்பிள் இலை அடையாளத்துடன், “அன்புள்ள கனடா, எங்களை மன்னிக்கவும். நாம் மிகவும் வருந்துகின்றோம்” என எழுதி மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த விளம்பரத்திற்கு கீழே “உங்கள் அமெரிக்க நண்பர்கள்” என கையொப்பமிடப்பட்டுள்ளது. எந்த நிறுவனங்களின் பெயரும் இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை.

இந்த விளம்பர இடத்தை வாங்கிய அமெரிக்கர் தனது பெயரை வெளியிட மறுத்துள்ளார்.

இது தனிப்பட்ட மனிதரின் செய்தியாக மட்டுமல்லாது, பலரின் உணர்வை பிரதிபலிக்கிறது என்பதற்காகவே அவரவர் அடையாளத்தை மறைத்துள்ளதாக கூறியுள்ளார்.

“வடக்கு எல்லைக்கு அப்பால் வாழும் எங்கள் தாக்கத்திற்குள்ளான அண்டை நாடுகளுக்கு, எவ்வளவு அமெரிக்கர்கள் இதனால் வேதனையடைகின்றனர் என்பதையும், கனடாவின் அரசியல் சுயாதீனத்தைக் கௌரவிக்காத சூழ்நிலைக்கு எங்கள் வருத்தத்தையும் தெரிவித்துவைக்க விரும்பினேன்,” என அவர் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

விளம்பர பலகைகளில் இந்த மன்னிப்பு செய்தியை வாங்கூவரில் பாதசாரிகள் பார்த்ததும், ஆச்சரியத்துடன் பதிலளித்துள்ளனர்.

சிலர் சந்தேகத்துடன் எதிர்வினை காட்டினாலும், பெரும்பாலானவர்கள் இதைப் பாராட்டியுள்ளனர். 

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…