இலங்கை

கிழக்கில் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் விவசாய காணி பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தோல்வியுற்ற அரசியல் தரப்பினர் மக்களிடம் பிளவை ஏற்படுத்துவதற்கு விளைகின்றனர்.

கடந்த காலங்களில் திகன, அக்குரணை, அளுத்கம உள்ளிட்ட பகுதிகளில் முரண்பாடு ஏற்பட்டதுடன் பல வழிபாட்டு ஸ்தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் எதிர்வரும் காலங்களில் மீண்டும் அவ்வாறு இடம்பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என உறுதியளிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் கொழும்பில் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக இளைஞன் ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் ஜனாதிபதி கருத்துரைத்திருந்தார்.

குறித்த இளைஞன் தாமாகவே விரக்தியான மனநிலைக்குச் சென்றிருந்ததாகவும் , பின்னர் அவர் கைது செய்யப்பட்டதுடன் இது தொடர்பில் அவரின் பெற்றோருக்கு அறியப்படுத்திய போது இந்த விடயத்தை அடையாளப்படுத்தியமைக்காக அவர்கள் நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தநிலையில் குறித்த இளைஞன் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…