கிரிக்கட்விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் மும்பை – வான்கடே மைதானத்தில் நேற்றிரவு (31) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. 

ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

அவ்வணி சார்பாக ரகுவன்ஷி 26 ஓட்டங்களையும், ரமன்தீப் சிங் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

மும்பை அணியின் பந்துவீச்சில்​ அஷ்வனி குமார் 4 விக்கெட்டுக்களையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து 117 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

மும்பை அணியின் துடுப்பாட்டத்தில் ரிக்கல்டன் 62 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பாக அன்ரு ரசல் மாத்திரம் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

What's your reaction?

Related Posts

கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளை ஆரம்பிக்கும் இலங்கை!

2027ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுத் தகுதிகாண் போட்டிகளுக்கான அணி நிரல்படுத்தல்கள் மற்றும் போட்டி அட்டவணை என்பன வெளியிடப்பட்டுள்ளன. மூன்றாம்…