No products in the cart.
கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் படுதோல்வியடைந்த CSK!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்று கொல்கத்தா அணிக்கு 104 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 10 ஓவர் நிறைவில் 02 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது