உலகம்

சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக ஜிம்பாப்வேயின் தற்போதைய விளையாட்டு அமைச்சரும் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியனுமான கிறிஸ்டி கோவென்ட்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, கிறிஸ்டி கோவென்ட்ரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 10வது தலைவராகவும், IOC வரலாற்றில் முதல் பெண் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (20) கிரேக்கத்தின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144வது சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) வாக்கெடுப்பில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக பதவி வகித்த ஜெர்மன் தாமஸ் பாக் என்பவருக்கு பதிலாக கிறிஸ்டி கோவென்ட்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழு உலகம் முழுவதும் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் நிர்வாகத்தைக் கவனிக்கும் ஒரு முக்கியமான அரசு சாரா அமைப்பாகும்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகளின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும், அவை எப்போது, எங்கு நடத்தப்படும் என்பதையும் இந்தக் குழு தீர்மானிக்கிறது.

What's your reaction?

Related Posts

 பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் திரும்பி வந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் தங்களின்…