No products in the cart.
சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ! போட்டி இடவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் Guwahati மைதானத்தில் நேற்றிரவு 30 ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக நித்திஷ் ராணா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 36 பந்துகளில் 81 ஓட்டங்களையும், அணித்தலைவர் ரியான் பராக் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சென்னை அணியின் பந்துவீச்சில் கலீல் அஹமட், நூர் அஹமட் மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 183 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக அணித்தலைவர் ருத்துராஜ் கெய்க்வாட் 63 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ராஜஸ்தான் அணியின் பந்தவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.