இந்தியா

தாஜ்மகாலை பார்வையிட வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

உத்தரப் பிரதேசத்தில் தாஜ்மகாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட செக் நாடு பெண் பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி மதியம் 1 மணியளவில் தாஜ்மகாலை பார்வையிட ஷாம்ஷான் காட் சாலையில் நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி கெமரா பதிவை ஆராய்ந்ததில் அந்த நபர் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்று தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அவரை தேட பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் துணை கமிஷ்னர் சையத் அரீப் அகமது தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

இலங்கைக்கு மோடி போகக்கூடாது-வைகோ

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள்…