இலங்கை

தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு!

2025 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 128 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக காவல்த்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான இரண்டு குற்றவியல் முறைப்பாடுகளும் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 3 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் அரசியல் கட்சி ஆதரவாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறை தெரிவித்தனர்.

அதன்படி, மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் 13 வேட்பாளர்களும் 43 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 11 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…