No products in the cart.
த.வெ.க தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அமலுக்கு வந்தது!
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில், இன்று (04) முதல் அது அமலுக்கு வந்துள்ளது.
நடிகர் விஜய், கடந்த 2024 பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அவரது அரசியல் செல்வாக்கு மற்றும் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வரும் சூழலில், அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.
இதன்படி, Y பிரிவு பாதுகாப்பில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் உட்பட 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.
இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் பிரவேசம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கட்சியான த.வெ.க. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு சவாலாக உருவெடுத்து வருகிறது.
இதற்கிடையில், விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.