நாளை காலை ஒன்பது மணி வரைக்கும் அவகாசம் – சட்ட எச்சரிக்கை விடுத்தார் அர்ச்சுனா எம்.பி
இலங்கை

நாளை காலை ஒன்பது மணி வரைக்கும் அவகாசம் – சட்ட எச்சரிக்கை விடுத்தார் அர்ச்சுனா எம்.பி

தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகள் மற்றும் அறிக்கைகளை நீக்குவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கால அவகாசம் வழங்கியுள்ளார்.

இது குறித்து தனது சமூக ஊடகங்களில் விடுத்துள்ள அறிவிப்பில், பகிரங்க வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு நாள் அவகாசம் தருவதாக அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“என் மீது பழி போடுவதற்காக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உங்கள் வீடியோக்கள் ஸ்டேட்மென்ட்களை அழிப்பதற்கும்

தனிப்பட்ட ரீதியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனது பாராளுமன்றத்தில் உள்ளே நடக்கும் சம்பவங்களை பகிர்ந்து மான நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் தெரிந்தோ தெரியாமலே நீங்கள் செய்த இந்த தவறுகளை நான் மன்னிப்பதற்கும்

உங்களை சட்டரீதியான கேள்விக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காகவும்பகிரங்க வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு நாள் அவகாசம் தருகிறேன்.

நாளைய தினம் காலை 9 மணியிலிருந்து சட்டரீதியான நடவடிக்கைகள் சகலருக்கும் எடுக்கப்படும்.

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு எடுக்கப்படும் எந்த ஒரு சமாதான நடவடிக்கைகளுக்கும் என்னால் மன்னிப்பு வழங்க முடியாது!” என தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…