No products in the cart.
பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து- 13 பேர் பலி
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இருந்து 13 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே வெடிவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.