இலங்கை

புத்தாண்டு காலப்பகுதியில் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

புது வருடப் பிறப்புடன் இலங்கை முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு செயற்பாடுகளின்போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாகவும் மேலும் , பட்டாசு தொடர்பான விபத்து ஒன்றில் காயமடைந்தவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு காலத்தில் பல்வேறு செயற்பாடுகளின்போது திடீர் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இத்தகைய விபத்துக்களைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பாக அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இத்தகைய விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…