இலங்கை

மாத்தறை துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் கைது

மாத்தறை, கந்தரவில் உள்ள தேவிநுவர தேவாலாயத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் T56 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த துப்பாக்கி மீட்கப்பட்டது.

முன்னர், இதே சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு சந்தேக நபரும் T56 துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, துப்பாக்கி மீட்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

தேவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலாயத்திற்கு அருகில், கடந்த மார்ச் 21 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் இருவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…