No products in the cart.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் – அரினா சபலென்கா சம்பியனாகினார்
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா வெற்றிபெற்றுள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக, பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா மற்றும் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் மோதிக்கொண்டனர்.
போட்டின் ஆரம்பம் முதலே கபலென்கா ஆதிக்கம் செலுத்தியிருந்தார். இதனால் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றிபெற்று சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
சபலென்கா மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.