விளையாட்டு

மீண்டும் சென்னை அணியின் தலைவராக தோனி

ஐபிஎல் தொடரின் சென்னை அணியில் இருந்து ருதுராஜ் கேக்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார்.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மீண்டும் எம். எஸ் தோனி தலைவராக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் தலைவராக தோனி நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது.

இதனையடுத்து மீண்டும் எம் எஸ் தோனி தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதேபோல இந்தமுறையும் தோனி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

What's your reaction?

Related Posts

கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளை ஆரம்பிக்கும் இலங்கை!

2027ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுத் தகுதிகாண் போட்டிகளுக்கான அணி நிரல்படுத்தல்கள் மற்றும் போட்டி அட்டவணை என்பன வெளியிடப்பட்டுள்ளன. மூன்றாம்…