தொழில்நுட்பம்

முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர 

நவலோக்க ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி மூலம் தெற்கு ஆசியாவின் முதல் AI தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்பட்ட MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியதன் மூலம், முன்னணி நவீன மருத்துவ உபகரணங்கள் சப்ளையர் நிறுவனமான Mediequipment Limited, இலங்கையின் சுகாதார பாதுகாப்பு தரங்களில் புதிய பரிமாணங்களை உருவாக்குவதில் வெற்றிகரமாக உள்ளது. இந்த தனித்துவமான சாதனை மூலம், நாட்டின் சுகாதார சேவை வழங்குநர்களை நவீன மற்றும் நோயாளி-மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் சக்தியளிப்பதன் மூலம் நோய் கண்டறியும் திறன்களை மேம்படுத்துவதற்கான Mediequipment Limited நிறுவனத்தின் அர்ப்பணிப்பு இங்கு வலியுறுத்தப்படுகிறது. 

இந்த நிகழ்வில், நவலோக்க மருத்துவமனைக்கு Mediequipment நிறுவனம் மூலம் Canon Vantage Orian MRI ஸ்கேனர் கொண்டு வரப்பட்டது, இதற்காக அமெரிக்க டொலர் 4.5 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நோயறிதல் துல்லியத்தை கணிசமாக உயர்த்தும் இந்த அதிநவீன MRI அமைப்பு, ஸ்கேன் செய்ய எடுக்கும் நேரத்தை குறைக்கும் மற்றும் நோயாளிகளுக்கு எந்தவிதமான சிரமமும் இல்லாத வசதியான அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டது. இந்தப் புரட்சிகர மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவ தொழில்நுட்பத்தின் நம்பகமான கூட்டாளியான Mediequipment Limited, தெற்காசியா முழுவதும் நவீன மருத்துவ உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாக தனது சிறப்பினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த Mediequipment Limited, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியான்ஸ் நாணயக்கார, “இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எப்போதும் புரட்சிகர மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் Mediequipment Limited நிறுவனத்தின் பல தசாப்தங்களாக நம்பகமான கூட்டாளராக செயல்பட்ட நவலோக்க மருத்துவமனை, AI தொழில்நுட்ப அடிப்படையிலான அண்மைய கால மருத்துவ தொழில்நுட்பத்தால் சக்திவாய்ந்ததாக மாறியதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 1987 ஆம் ஆண்டில் முதல் CT ஸ்கேனர் இயந்திரத்தை வழங்கியதிலிருந்து எங்கள் மருத்துவ உபகரண தீர்வுகளில் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக, இந்த நேரத்தில் நவலோக்க மருத்துவமனையின் தலைவர் கலாநிதி ஜயந்த ரமதாஸவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என தெரிவித்தார். 

Canon Medical Systems இன் Raffine-i பிரதிநிதியான இந்த அமைப்பு, அதிக தேவை கொண்ட மருத்துவமனை சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன தொலை-கட்டுப்பாட்டு ரேடியோலஜி மற்றும் ஃப்ளோரோஸ்கோபி அமைப்பாக குறிப்பிடத்தக்கது. உயர் செயல்திறன் கொண்ட தட்டையான பேனல் டிடெக்டர் மற்றும் சாதாரண அறை வெப்பநிலையில் ஆற்றல் திறனை பராமரிக்கும் திறன் கொண்ட இந்த அமைப்பு, எப்போதும் உயர் தரமான படிமங்களை வழங்குவதற்கான நிலையான செயல்திறனை வழங்குகிறது. இது மருத்துவ இமேஜிங்கில் புதிய பரிமாணங்களை வெளிக்கொணர்ந்து, நோயாளிகளுக்கு அதிகரித்த சிகிச்சை வாய்ப்புகளை வழங்குகிறது. 

Mediequipment நிறுவனம், நவலோக்க மருத்துவமனையின் நோயறிதல் திறனை மேலும் மேம்படுத்துவதற்காக Canon Auilion Serve CT Scanners, தெற்காசியாவில் AI தொழில்நுட்பத்தால் செயல்படும் முதல் இதய சிறப்பு சிடி ஸ்கேனரான Canon Aquilion One Prism Edition Cardiac CT scanner ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், AI-தொழில்நுட்பத்தில் முழு உடல் CT ஸ்கேனிங் செய்யக்கூடிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் ஒன்றும் இதில் அடங்கும். இந்த அனைத்து முன்னேற்றங்களும் நவலோக்க மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், நோயாளிகளுக்கு மேலும் வசதியான சேவைகளை வழங்குவதற்கும் Mediequipment நிறுவனம் பணியாற்றியுள்ளது. 

இந்த ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புத் துறையை மாற்றியமைப்பதில் தங்களது சிறப்புத் திறனை தொடர்ச்சியாக பராமரித்து வருவதாகவும், மருத்துவ நிபுணர்களுக்கு மேம்பட்ட இமேஜிங் தீர்வுகளை வழங்கும் திறனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் திரு. நாணயக்கார வலியுறுத்தினார். நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் நாட்டின் மருத்துவமனைகளை அதிகரித்து ஆயத்தப்படுத்த முடிந்ததைப் பற்றி அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

No Content Available