No products in the cart.
வரியை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் வரி விதிக்கப்படும் ; சீனாவை எச்சரித்த ட்ரம்ப்
சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருட்கள் மீது 34 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவிருக்கும் இந்த கூடுதல் வரி விதிப்பு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனா அமெரிக்காவுக்கு விதித்துள்ள இந்த வரி விதிப்பை மீளப் பெறாவிட்டால், 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, சீனாவுடனான சந்திப்புகள் தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும்.
சந்திப்புகள் குறித்து பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.