No products in the cart.
வாட்ஸ் அப்பில் தெரியாத எண்ணிலிருந்து வரும் புகைப்படங்கள்!
புகைப்படத்தை வைத்து நடைபெறும் புதிய வாட்ஸ்அப் மோசடியைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்கள் வாட்ஸ்அப் இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும்.இதற்கு வாட்ஸ்அப் நிறுவனமும் தொடர்ந்து பல அப்டேட்டுகளை செய்து கொண்டே இருக்கின்றது. பணம் செலுத்துதல், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை ஒரே செல்போனில் இருந்து உருவாக்கிக்கொள்ளும் வசதி என்று பல புதிய அம்சங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றது.
ஆனால் தெரியாத நம்பரிலிருந்து வரும் புகைப்படத்தினால் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் காலியாகிவிடும் என்ற எச்சரிக்கை தற்போது எழுந்துள்ளது.
இந்த மோசடி புகைப்படங்களில் மறைக்கப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் போனுக்குள் நுழைகிறது. தொலைத்தொடர்புத் துறையும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் வாட்ஸ் அப் அல்லது பிற மெசேஜிங் பயன்பாடு மூலம் புகைப்படங்களை அனுப்புகின்றனர். சில தருணங்களில் புகைப்படங்களில் உள்ள நபர்களை அடையாளம் காட்ட கேட்பது போன்று அழைப்பு வருமாம்.
நீங்கள் அந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தவுடன் உங்கள் மொபைல் போன் செயலிழந்து, மோசடி செய்பவர்களுக்கு உங்கள் சாதனத்திற்குள் நுழைய வழி கிடைக்கிறது.