No products in the cart.
விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் சிக்கிய நபர்!
சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களுடன் செல்ல முற்பட்ட பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.
2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை கொண்டு செல்ல முயன்ற விமான பயணி ஒருவர் நேற்று 11 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்று அதிகாலை 01.07 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் UL-308 ஏறுவதற்காக இந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
சந்தேக நபரின் பயண பொதிகளை பரிசோதனை செய்த விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.