உலகம்

வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட மூன்று சடலங்கள்

மேற்கு யேர்மனியின் ரைன்லேண்ட்-பலட்டினேட் மாநிலத்தின் வெஸ்டர்வால்ட் பகுதியில் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பலியானவர்கள் 47 வயது ஆண், 44 வயது பெண் மற்றும் 16 வயது ஆண் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சீகன் நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெய்ட்ஃபெல்ட் நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களும் குற்றம் சாட்டப்பட்டவரும் வெய்ட்ஃபெல்டில் நீண்டகாலமாக வசிப்பவர்கள் என்று நகர மேயர் கார்ல்-ஹெய்ன்ஸ் கெஸ்லர் கூறினார். காவல்துறையினரின் கூற்றுப்படி, 03:45 மணிக்கு ஒரு பெண் ஒரு வன்முறை சம்பவத்தைப் பற்றிப் புகார் அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் அழைப்பாளர் என்பதை காவல்துறை நிராகரிக்கவில்லை. துப்பாக்கி மற்றும் குத்தும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை வந்தவுடன் சம்பவ இடத்தை வந்ததும் குறித்த சந்தேச நபரான ஆண் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார். தற்போது அவரைத் தேடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

 இரவு முழுவதும் தொடரும் தேடுதலில் காவல்துறையின் தந்திரோபாய அதிகாரிகள் ஒரு உலங்கு வானூர்தியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

 பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் திரும்பி வந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் தங்களின்…