உலகம்

ஸ்பெயின், போர்த்துக்கலில் மின்தடை

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலில் நேற்று 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை திடீரென மிகப்பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது.

சுரங்கப்பாதை நெட்வொர்க்ஸ், போன் லைன்கள், ஏடிஎம் மெஷின்கள், போக்குவரத்து டிராபிக் சிக்னல்கள் சேவை பாதிக்கப்பட்டன.

பிரான்ஸ் தலைநகர் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மொத்த மக்கள் தொகை 5 கோடியாகும். இவர்களின் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியாகவில்லை.

போர்த்துக்கலில் சுமார் 1.06 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கேயும் பயங்கர மின்தடை ஏற்பட்டது. தலைவர்கள், வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பாதிக்கப்பட்டன.

மின்சாரம் வழங்கும் நெட்வொர்க்கில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மின்சார தடை ஏற்பட்டதாக போர்த்துக்கல் தெரிவித்துள்ளது. போர்த்துக்கலில் நீதிமன்ற பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏடிம் மற்றும் மின்னணு கட்டணம் சேவைககள் பாதிக்கப்பட்டன.

What's your reaction?

Related Posts

 பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் திரும்பி வந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் தங்களின்…