சினிமா

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி – வடிவேலு

சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சித்திரை 01 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரபல நகைச்சுவை இணை மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் வடிவேலு பல்வேறு வேடங்களில் நடித்துள்ளதுடன், ஒரு பெண் வேடத்திலும் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

கேத்ரின் த்ரேசா, வாணி போஜன், முனிஷ்காந்த், மைம் கோபி, ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

What's your reaction?

Related Posts

பிரபல நடிகர் காலமானார்!

இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘அவர்கள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ‘பகலில் ஒரு இரவு’, ‘சிவாஜி’ போன்ற பல படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உட்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார். 71 வயதான இவர் உடல்…