இந்தியா

ஆந்திர தலைநகர் அமராவதிக்காக மத்திய அரசு ரூ.4,285 கோடி நிதி

ஆந்​திர மாநில தலைநகருக்​காக மத்​திய அரசு ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்​ளது. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் திகதி இரண்​டாக பிரிக்​கப்​பட்டு தெலங்​கானா மாநிலம் உரு​வானது.

அப்​போது ஹைத​ரா​பாத் தெலங்​கா​னா​வின் தலைநக​ராக இருக்​கும் என்​றும், புதிய தலைநகரை உரு​வாக்​கும் வரை அல்​லது 10 ஆண்​டுகளுக்கு ஆந்​தி​ரா​வின் தலைநக​ராக​வும் ஹைத​ரா​பாத் இருக்​கும் என்​றும் மாநில பிரிவினை மசோதா​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இருந்​தா​லும், மாநிலம் பிரிந்த பின்​னர் ஆந்​தி​ரா​வின் முதல்​வ​ரான சந்​திர​பாபு நாயுடு, குண்​டூர்​-​விஜய​வாடா இடையே அமராவ​தியை தலைநகர​மாக அறிவித்​தார். இதற்​காக அப்​பகுதி விவ​சாயிகள் சுமார் 30 ஆயிரம் ஏக்​கர் நிலத்தை தாமாகவே முன் வந்து வழங்​கினர். 2014 முதல் 2019 வரை அமராவ​தி​யில் சட்​டப்​பேர​வை, தலைமை செயல​கம் போன்​றவை கட்​டப்​பட்​டு, அங்​கேயே ஆட்​சி​யும் நடந்​தது.

ஆனால், 2019-ல் ஒய்​.எஸ்​.ஆர். காங்​கிரஸ் கட்​சி​யின் ஜெகன்​மோகன் ரெட்டி முதல்​வ​ரா​னார். இதையடுத்​து, அமராவ​தி​யில் சட்​டப்​பேர​வை​யும், கர்​னூலில் உயர் நீதிமன்​ற​மும், விசாகப்​பட்​டினத்​தில் தலைமை செயல​க​மும் இருக்​கும்​படி மூன்று தலைநகர கொள்​கையை கொண்டு வந்​தார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பியது.

இதனை தொடர்ந்து 2024-ல் ஆந்​தி​ரா​வில் நடந்த தேர்​தலில் தெலுங்கு தேசம் கூட்​டணி வெற்றி பெற்று சந்​திர​பாபு நாயுடு மீண்​டும் முதல்​வ​ரா​னார். மீண்​டும் அமராவ​தியே தலைநக​ராக இருக்​கும் என சந்​திர​பாபு நாயுடு அறி​வித்​ததோடு, அதனை மீண்​டும் உயிர்ப்​பிக்க மத்​திய அரசிடம் நிதி உதவி​யும் கேட்​டார்.

ஏற்​கெனவே மாநில பிரி​வினை மசோ​தா​வில் ஆந்​தி​ரா​வின் தலைநகரை நிர்​மாணிக்க மத்​திய அரசு நிதி உதவி செய்​யும் என கூறி​யிருப்​ப​தால், மத்​திய அரசும் நிதி உதவி வழங்க ஒப்​புக்​கொண்​டது.

தற்​போது அமராவ​தி​யில் கட்​டு​மானப் பணி​கள் கிடு​கிடு​வென நடந்து வரு​கின்​றன. மேலும், ஆந்​திர அரசுக்கு தேவை​யான அரசு கட்​டிடங்​கள், அரசு அதி​காரி​கள், ஊழியர்​களுக்​கான குடி​யிருப்பு கட்​டிடங்​கள், வணிக வளாகங்​கள் என அமராவ​தியை ஒரு நவீன தலைநகர​மாக சந்​திர​பாபு நாயுடு உரு​வாக்கி வரு​கிறார். இந்​நிலை​யில், ஆந்​தி​ரா​வுக்கு ரூ.4,285 கோடி நிதி உதவியை மத்​திய அரசு நேற்று வழங்கி இருக்​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

What's your reaction?

Related Posts

இலங்கைக்கு மோடி போகக்கூடாது-வைகோ

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள்…