கனடா

ஆல்பர்ட்டா மாகாணத்தில் வேகமாக அதிகரித்து வரும் வைரஸ் தொற்று!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மண்ணன், தட்டம்மை அல்லது மணல்வாரி (measles) என்னும் வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. 

இதுவரை 13 பேருக்கு தட்டம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்கள், ஒரு வயது முதல் 54 வயது வரையுள்ளவர்கள் ஆவர்.

தட்டம்மை வைரஸ் தொற்று புயல்போல் பரவிவருவதாகத் தெரிவித்துள்ள ஆல்பர்ட்டா சிறார் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவரான Dr. Sidd Thakore, தடுப்பூசி பெறாதவர்கள் பலரை இந்த தொற்று பாதிக்க உள்ளதால், அடுத்த சில வாரங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

ஆகவே, ஆல்பர்ட்டா மாகாண மக்கள் தட்டம்மைக்கான தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

What's your reaction?

Related Posts

டொரொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் சடலம் மீட்பு !

டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் டவுன்டவுன் வளாகத்தில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. டொரொண்டோ பொலிசாரின் கொலைக் குற்ற விசாரணைப் பிரிவு இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் College Street இல் உள்ள Leslie L. Dan மருந்தியல் கட்டிடத்திற்கு…