கனடா

ஒன்டாரியோவில் எரிபொருள் வரி குறைப்பை நிரந்தரமாக்கும் அரசாங்கம்!

கனடா மத்திய அரசு நுகர்வோர் மீதான கார்பன் வரியை (Consumer Carbon Tax) ரத்து செய்யும் முடிவு எடுத்திருந்தாலும், ஒன்டாரியோ மாநில அரசு எரிபொருள் வரி குறைப்பை நிரந்தரமாக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாது என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) அலுவலகம் உறுதி செய்துள்ளது.

2022-ஆம் ஆண்டு ஜூலையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட லீற்றர் 5.7 சதங்கள் குறைப்பு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஒன்டாரியோவில் எரிபொருள் வரி லீற்றருக்கு 14.7 சதங்கள் குறைக்கப்பட்டது.

இப்போது, இந்தக் குறைப்பை நிரந்தரமாக்கும் முடிவை ஃபோர்ட் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நுகர்வோர் கார்பன் வரியை நீக்குவதாக அறிவித்தார்.

இதன் மூலம், ஏப்ரல் 1 முதல் எரிபொருள் விலைகள் லீற்றர் ஒன்றுக்கு 19.9 சதங்கள் வரை குறையலாம் எனத் திருத்தி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

டக் ஃபோர்ட், கார்பன் வரிக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியவராக இருந்து வருகிறார்.

எனவே, ஒன்டாரியோவின் எரிபொருள் வரி குறைப்பு நிரந்தரமாகும், மேலும் கார்பன் வரி நீக்கமும் எரிபொருள் விலைகளை மேலும் குறைக்கும் வாய்ப்பிருக்கிறது.

What's your reaction?

Related Posts

ஆல்பர்ட்டா மாகாணத்தில் வேகமாக அதிகரித்து வரும் வைரஸ் தொற்று!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மண்ணன், தட்டம்மை அல்லது மணல்வாரி (measles)…