No products in the cart.
கனடாவில் பணவீக்கம் குறித்து வெளியான தகவல்!
கனடாவின் மொத்த பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 2.6% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் இது 1.9% ஆக காணப்பட்டது.
தற்காலிக வரி விடுவிப்பு முடிவுக்கு வந்ததால் கனடா அரசின் வரி தளர்வு ஜனவரி மாதம் முழுவதும் நடைமுறையில் இருந்ததால், நுகர்வோர் சில பொருட்கள், உணவக கட்டணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி (GST) மற்றும் எச்டிஎஸ்டி (HST) வரிச் சலுகை பெற்றனர்.
ஆனால், பெப்ரவரி 15 ஆம் திகதி இந்த வரி தளர்வு முடிவுக்கு வந்ததால், பணவீக்கம் மீண்டும் உயர் நிலையில் எட்டியுள்ளது.
எதிர்வுகூறப்பட்டதனை விடவும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.