சிங்கப்பூரில் அடுத்த பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் இன்று (15) பாராளுமன்றத்தை கலைத்தார்.
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறும் என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் மே மாதம் 3 ஆம் திகதி தேர்தல் நாள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்பது வேட்புமனுத் தாக்கல் நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமராகவும் ஆளும் மக்கள் கட்சியின் தலைமைச் செயலாளராகவும் உள்ள லாரன்ஸ் வோங்கின் முதல் பொதுத் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அதன் 14 ஆவது தேர்தலான இதில், 33 தனி மற்றும் குழுத் தொகுதிகளில் 97 பாராளுமன்ற இடங்களுக்காக மசெக கட்சி போட்டியிடும். அநேகமாக அவை அனைத்திலும் எதிர்க்கட்சிகள் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.