சில பிரதேசங்களில் உச்சம் கொடுக்கும் சூரியன்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவானபலத்த மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வட-மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.  

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (7) நண்பகல் 12.12 அளவில் கொழும்பு, அவிசாவளை, தலவாக்கலை, திம்புள்ள, கலக்கும்புர மற்றும் தம்பகல்ல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Exit mobile version