சுவிஸில் பெண் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீட்பு
சுவிட்சர்லாந்தின் எம்மன்புருக்கே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புத் தொகுதியொன்றில் ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் உயிரிழந்த நிலையில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றவியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலைவழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக தற்போதைக்கு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர் குற்றமற்றவர் என கருதப்படுகிறார்.
லுசேர்ன் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். சட்ட மருத்துவ நிறுவனத்திலிருந்தும், சூரிச் புலனாய்வு நிறுவனத்திலிருந்தும் சிறப்பு வல்லுநர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தற்போதைக்கு வழங்க முடியாது. மேலும் தகவல்கள் கிடைக்கும் போது போலீசாரும், பொது வழக்கறிஞர் அலுவலகமும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.