புத்தாண்டு காலத்தில் சூரியனின் இயக்கம் காரணமாக பல பகுதிகளில் வெப்பமாக இருக்கும். சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று 12ஆம் திகதி நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
முதியவர்கள், குழந்தைகள் நோயாளர்கள் வெளியில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என்றும், போதிய நீராகாரத்தை எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.