கனடாவின் டொராண்டோவில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் தீவிரமாக காயமடைந்து, உயிருக்கு போராடி வருகிறார் என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் தாமாகவே வைத்தியசாலைக்கு நடந்து சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞர் இரவு 8:20 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததாக காவல்த்துறையினர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளனர்.
எடடோபிகோக் பகுதியில் உள்ள பின்ச் அவன்யூ மேற்கு மற்றும் மார்டின் க்ரோவ் வீதி அருகே இந்த சம்பவம் நடந்ததாக தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சந்தேகநபர் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் காவல்த்துறையினரால் வெளியிடப்படவில்லை.