பாம்பு கடித்து இளைஞன் பலி!

இந்தியாவின் தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (22). இவர் நேற்று (04) தனது நண்பர் ராம்குமாருடன் சுருளிப்பட்டி வீதியில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டர் சைக்கிளின் முகப்பு விளக்குப் பகுதியில் இருந்து பாம்பு மேலே வந்தது. வண்டியை நிறுத்துவதற்குள் பாம்பு அவரை கடித்தது. கம்பம் அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராயப்பன்பட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version