தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் உடன் அரசியலில் பங்கு பெற வேண்டும் என்று பலர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், விஜய் அழைத்தாலும் அரசியல் செல்லும் எண்ணம் இல்லை என்று நடிகை ஒருவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் வேறுயாருமில்லை, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான். சமீபத்தில், தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா கலந்து கொண்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா விஜய் அழைத்தாலும் அரசியல் வரும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.