இலங்கை – சிம்பாப்வே தீர்மானமிக்க போட்டி இன்று!

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (7) இடம்பெறவுள்ளது. 

இந்தப் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

நடைபெற்று வரும் இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன. 

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் தொடரை கைப்பற்றும் தீர்மானமிக்க போட்டியாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version