இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்கள் முதலாவது பல்கலைக்கழக இளைஞர் காலநிலை தூதூதுவர்கள் திட்டத்திற்காக இணைந்து செயல்படுகின்றன. ஆகஸ்ட் 11 ஆம் திகதி திங்கட்கிழமை BMICH இல் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அறிவிக்கப்பட்ட இந்த முயற்சியானது, திறன் விருத்தி, பங்குடைமைகள் மற்றும் வலையமைப்புகள் மூலம் உயர்கல்வியில் காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்க இலங்கை இளைஞர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள், காலநிலை ஆதரவாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் சிரேஷ்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் பேராசிரியர் வசந்த குமார, மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் பசுமை நிதியில் சர்வதேச நிபுணரான டாக்டர் ஆனந்த மல்லவதந்திரி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிட பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் கல்வி மற்றும் கலைகளுக்கான பதில் பணிப்பாளர் டாக்டர் ஃபரா ஆல்டன்பெர்க் ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர்.
பிரிட்டிஷ் கவுன்சில் ஆனது தனது முறைசாரா கல்வித் திட்டங்கள் மூலம் காலநிலை நடவடிக்கைகளில் இளைஞர்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்காக நடத்தும் தொடர்ச்சியான திட்டங்களில் இந்த முயற்சியானது புதிய திட்டமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த விரிவான நிகழ்ச்சித்திட்டமானது இலங்கையைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைக்கான சக்திவாய்ந்த ஆதரவாளர்களாக மாற்றியுள்ளது. பல்கலைக்கழக இளைஞர் காலநிலை தூதுவர்கள் திட்டமானது, பல்கலைக்கழக மாணவர்களை தலைமைத்துவம் மற்றும் காலநிலை நடவடிக்கை திறன்களுடன் சித்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே வேளை பாலின சமத்துவம் மற்றும் காலநிலை முயற்சிகளில் சமூக உள்ளடக்கம் பற்றிய அவர்களின் புரிதலை ஆழப்படுத்துகிறது. அனுபவமிக்க கற்றல், கூட்டு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய பங்கேற்பு மூலம், காலநிலை தலைமைத்துவம், சமூக உள்ளடக்கம் மற்றும் அமைப்பு சிந்தனையை வளர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கற்றல் பயணத்தின் மூலம் உயர்கல்வியில் 18-34 வயதுடைய இளைஞர்களை இது வழிநடத்துகிறது.
இந்த முயற்சியானது, காலநிலை, கல்வி மற்றும் இளைஞர் ஈடுபாடு ஆகியவற்றில் பிரிட்டிஷ் கவுன்சிலின் உலகளாவிய முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கிறது, மேலும் காலநிலை தலைமைத்துவத்திற்கான ஐக்கியராஜ்ஜியத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்பிலிருந்து உறுதியைப் பெறுகிறது, என்று இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிடப்பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் கூறினார். இளைஞர்களுக்கு சரியான கருவிகள், சரியான வலையமைப்புகள் மற்றும் சரியான ஊக்கத்தினை வழங்கும்போது, அவர்கள் மாற்றத்திற்கு எதிர்வினையாற்றுவதில்லை – அவர்கள் அதை வழிநடத்துகிறார்கள் என்று நாம் நம்புகிறோம்.
அரசாங்க மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்த திட்டத்தின் முதல் பதிப்பில் இணைந்துள்ளன: அவற்றில் திறந்த பல்கலைக்கழகம், ஓசன் பல்கலைக்கழகம், ருஹுணு பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் NSBM பசுமை பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும், விரைவில் மற்றொரு பல்கலைக்கழகமும் இணைந்து கொள்ளவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரியும் பிரிட்டிஷ் கவுன்சிலின் இளைஞர் காலநிலை திட்டங்களின் முன்னாள் மாணவியுமான நிவேதா சிவராஜா, இந்த முயற்சியில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனது ஆலோசனையைப் பகிர்ந்து கொண்டார், உங்கள் இளங்கலை ஆண்டுகளில் காலநிலை நிபுணர்களுடன் இணைந்து செயற்படுவது காலநிலை தொடர்பான தொழில்களுக்கான பாதைகளைத் திறக்கும் மற்றும் நடைமுறையில் காலநிலை நடவடிக்கை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய உதவும் என்று கூறினார். நிவேதா தற்போது விவசாயம் மற்றும் மண் அறிவியலில் முனைவர் கற்கை நெறியை மேற்கொண்டுள்ளார்.
நிவேதா போன்ற இளம் தலைவர்கள் தமது கல்வி மற்றும் தொழில்முறை வாழ்க்கை முழுவதும் காலநிலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இளைஞர்களின் சக்தி, ஆர்வம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு சான்றாக உள்ளனர். ருஹுணு பல்கலைக்கழகத்தின் பிரிட்டிஷ் கவுன்சிலின் இளைஞர் காலநிலை தூதுவர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாளிக்க ரணதுங்க கூறுகையில், பிரிட்டிஷ் கவுன்சிலின் கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால வளமான பணியுடன், இளைஞர் காலநிலை தூதுவர்கள் திட்டமானது நமது பூமியின் உண்மையான பாதுகாவலர்களாக தாக்கத்தை ஏற்படுத்தும் காலநிலை நடவடிக்கைகளில் இளைஞர்களை வழிநடத்தும் ஒரு கலாசாரத்தை ஊக்குவிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
காலநிலை தூதுவர்கள் முயற்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழகங்கள் இணைவு
