கனடாவில் கண்கள் இன்றி பிறந்த பூனைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

கண்கள் இன்றி பிறந்த பூனை, கனடாவின் மானிட்டோபாவில் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. அனைவரையும் கவர்ந்த பூனைக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

ஸ்டைன்பேக்கில் வசிக்கும் டோரி என்ற இந்த பூனை, அந்தப் பகுதி விலங்கு மீட்பு அமைப்பின் தூதராக செயற்படுகின்றது.

மார்க் ஹாமில் நடிப்பில் உருவாகியுள்ள தி லோங் வால்க் The Long Walk திரைப்படத்தில் தோன்றியுள்ளது.டோரி மிகவும் அன்பான பூனை. எப்போதும் கட்டிப்பிடிக்க விரும்பும் அவள், தொட்டுணர்வின் மூலம் உலகத்தை உணர்கிறாள்,” என்று ஒன்பது ஆண்டுகளாக டோரியை வளர்த்து வரும் மிச்செல் நியூஃபெல்ட் கூறினார்.

ஸ்டீஃபன் கிங் எழுதிய 1979 நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், ஒரு பயங்கரமான போட்டியைச் சுற்றி நகர்கிறது. படக்குழுவுக்கு கண்கள் இல்லாத அல்லது ஒரு கண்ணே கொண்ட பூனை தேவைப்பட்ட நிலையில், நியூஃபெல்டின் நண்பர் டோரியை பரிந்துரைத்தார்.

பிராட்ஷில் மாகாண பூங்காவிலும் வின்க்லர் உட்பட மானிட்டோபாவின் பல இடங்களிலும் படம் எடுக்கப்பட்டது. டோரியின் காட்சி ஒரே நாளில் முடிவடைந்தது.

“அவள் மிகச் சிறப்பாக நடந்துகொண்டாள், எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினாள்,” என நியூஃபெல்ட் கூறினார்.

படப்பிடிப்பு நேரங்களில் டோரிக்கு நிழல், ஓய்வு மற்றும் நடிகர், தொழில்நுட்பக் குழுவினரின் அன்பான அணுகுமுறை கிடைத்தது.

கண்கள் இல்லாதிருந்தாலும் டோரி ஒரு சுறுசுறுப்பான பூனை என்று நியூஃபெல்ட் கூறுகிறார். “அவள் பார்வையற்றவள் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். வீட்டில் ஓடுகிறாள், மேசை மீது பாய்கிறாள், ஈக்களைப் பிடிக்கிறாள்.

அவளுடைய உணர்ச்சிகள் அசாதாரணமாக கூர்மையானவை என தெரிவித்துள்ளார்.

The Long Walk திரைப்படம் இந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.   

Exit mobile version