மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்டைலிஷ்டான ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்ட 2 ஆண்டுகளில் அவர் 4 முறை கர்ப்பமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்களும் உள்ள நிலையில் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறும் முன்னரே ஜாய் கிரிசில்டா என்பவரை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதோடு, அவருடன் இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, அவரை கர்ப்பமாக்கிவிட்டு பிரிந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஜாய் கிரிசில்டாவும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த புகாரின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தொகுப்பாளினி சிவசங்கரியின் யூடியூப் சேனலில் பிரத்தியேகமாக பேட்டியளித்து வரும் ஜாய் கிரிசில்டா,
மாதம்பட்டி தங்கராஜ் பற்றி அடுக்கடுக்கான புகார்களை கூறியிருக்கிறார். இந்தப் பேட்டிக்கு முன்னர் வரை ஜாய் கிரிசில்டா மீது தான் தவறு இருப்பதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன் பழகி உறவில் இருந்ததாகவும் நெட்டிசன்கள் சாடி வந்தனர். ஆனால் அவரின் இந்த பேட்டிக்கு பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் அவரை ஏமாற்றி விட்டதாக பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஜாய் கிரிசல்டாவை பேட்டி எடுத்த சிவசங்கரி மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பல பகீர் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஜாய் கிரிசில்டா தன்னுடைய முதல் திருமணத்தில் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டு தான் இரண்டாவதாக மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அவரோ முதல் மனைவியை பிரியாமலேயே ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். அதனை சரியாக விசாரிக்காமல் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டது பெரிய தவறு. அதேபோல் சினிமாவில் பெரிய ஸ்டைலிஷ்ட் ஆக இருந்த ஜாய், மாதம்பட்டி ரங்கராஜ்-காக தன்னுடைய கெரியரையே விட்டுவிட்டு அவரையே மலைபோல் நம்பி வாழ்ந்து இருக்கிறார். அதுவும் அவர் செய்த தவறு.
அதேபோல் ஜாய் கிரிசில்டா செய்த மற்றொரு பெரிய தவறு என்னவென்றால் அது அவர் கர்ப்பமானது தான். மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கர்ப்பமாகி, அபார்ஷன் செய்திருக்கிறார் ஜாய் கிரிசில்டா. தற்போது நான்காவது முறை கர்ப்பமான பின்னர் 7 மாத குழந்தையையும் வயிற்றில் சுமந்து வருகிறார். தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக தான் தற்போது போராடி வருகிறார் ஜாய் கிரிசில்டா. அந்தக் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமாக இருப்பதாக சிவசங்கரி கூறியுள்ளார்.
4 முறை கர்ப்பமாக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்
