நன்பேரியல் வனப்பகுதியில் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார். 

தொடர்ந்தும் சில நாட்களாக இந்த வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், தீயினால் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

தீயை அணைக்க இராணுவமும் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவும் இணைந்து பணியாற்றி வருகின்றன. 

அப்பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் ​​தீப்பரவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Exit mobile version