நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா , அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் கல்கி2898AD.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்திருந்தார். மேலும் திஷா பாட்னி, அன்னா பென், துல்கர் சல்மான், மிருனாள் தாகூர் என இப்படத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்திருந்தனர்.
இப்படத்தில் சுமதி என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஆனால், கல்கி படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்கவில்லை என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளது. அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் வேறு யார் நடிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.