2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரதான இலக்கு

அடுத்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். 

தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதியின் அளவை நாட்டிற்கு முதலீட்டைக் கொண்டுவரும் திட்டங்களுக்கு பயன்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

வரவு செலவுத் திட்டம் குறித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version