சூடானின் தார்பூர் பிராந்தியத்தில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்-ஃபாஷர் நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்குப் பராமிலிட்டரி ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த அமைப்பு இதுவரை பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எப் RSF மற்றும் சூடான் இராணுவம் இடையே கடும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
எல்-ஃபாஷர், தார்பூரில் இராணுவம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடைசி முக்கிய கோட்டையாகும். அங்கு சிக்கித் தவிக்கும் 3 லட்சம் பொதுமக்களைப் பாதுகாக்கும் போரில் இராணுவம் போராடி வருகிறது.3
காலை தொழுகைக்காலத்தில் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும், பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுவரை 78 பேரின் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.