ஹொரணை – வேவல இசிபத்தன புராண ரஜ மஹா விகாரையில் வருடாந்த கதின பெரஹெர நடைபெறுவதால், இன்று (20) இரவு ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, இன்று இரவு 7 மணி முதல் பெரஹெர முடியும் வரை ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தியள்ளது.